மிரட்டலான பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்காவை சுருட்டிய இலங்கை!

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், தென் ஆப்பிரிக்க அணி 222 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டர்பனில் நடந்த முதல் டெஸ்டில், இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்நிலையில், போர்ட் எலிசபெத்தில் இலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் நேற்று தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

AP

ICC

தொடக்க வீரர் டீன் எல்கர் மற்றும் ஆம்லா இருவரையும் விஷ்வா பெர்னாண்டோ வெளியேற்றினார். பின்னர் வந்த பவுமா ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். இதனால் தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுக்கு 15 ஓட்டங்கள் என்ற மோசமான நிலைக்கு சென்றது.

எனினும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மார்க்ராம் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் 60 ஓட்டங்களில் ரஜிதா பந்துவீச்சில் அவுட் ஆனார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் விக்கெட் கீப்பர் டி காக் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 86 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 61.2 ஓவரில் 222 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை தரப்பில் பெர்னாண்டோ, ரஜிதா தலா 3 விக்கெட்டுகளையும், தனஞ்செய டி சில்வா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி, முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ஓட்டங்கள் எடுத்தது.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers