முதல் முறையாக முதல் பந்திலேயே அவுட்டான தென் ஆப்பிரிக்க ஜாம்பவான்: மிரட்டிய இலங்கை பந்துவீச்சாளர்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹசிம் ஆம்லா முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்.

இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

முதலில் பேட்டிங் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி தற்போதைய நிலவரப்படி 23 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியின் ஜாம்பவான் ஹசிம் ஆம்லா தான் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார்.

அவரின் விக்கெட்டை போல்ட் முறையில் இலங்கை பந்துவீச்சாளர் விஷ்வா பெர்ணாண்டோ வீழ்த்தினார்.

தலைசிறந்த வீரரான ஆம்லாவை டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக முதல் பந்திலேயே அவுட்டாக்கியவர் என்ற பெருமை பெர்ணாண்டோவுக்கு கிடைத்துள்ளது

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers