வரலாறு படைக்கும் முனைப்பில் களமிறங்கும் இலங்கை அணி! உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Report Print Raju Raju in கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்க மண்ணில் முதல்முறையாக தொடரை வென்று வரலாறு படைக்கும் முனைப்புடன் இலங்கை அணி 2-வது டெஸ்டில் இன்று களம் இறங்குகிறது.

திமுத் கருணாரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டர்பனில் நடந்த முதலாவது டெஸ்டில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் இன்று தொடங்குகிறது.

முதலாவது டெஸ்டில் இலங்கை அணியின் எழுச்சி அனைவரையும் வியக்க வைத்தது. 304 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 226 ரன்களில் 9-வது விக்கெட்டை இழந்த போது தோல்வி உறுதி என்றே நினைத்தனர்.

ஆனால் குசல் பெரேரா (153 ரன்) தனி வீரராக நிலைத்து நின்று போராடி தங்கள் அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை தேடித்தந்தார்.

தென்ஆப்பிரிக்க மண்ணில் இதுவரை ஆசிய கண்டத்தை சேர்ந்த அணிகள் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. புதிய சகாப்தம் படைக்க இலங்கை அணிக்கு தற்போது அருமையான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. இந்த டெஸ்டில் அந்த அணி குறைந்தது டிரா செய்தாலே தொடரை சொந்தமாக்கி விடலாம்.

இதன் காரணமாக இந்த போட்டியின் மீது ரசிகர்களுக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers