டோனி ஸ்டெம்பிற்கு பின்னால் இருந்தால் இப்படி செய்யாதீர்கள்! பிசிசிஐ எச்சரிக்கை

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் விக்கெட் கீப்பரான டோனி ஸ்டம்பிற்கு பின்னால் இருந்தால் கிரீசை விட்டு வெளியே வராதீர்கள் என்று ஐசிசி கூறியுள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு முதலில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற இறுதி மற்றும் கடைசி ஐந்தாவது போட்டியில் இந்திய அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி, நியுசிலாந்து மண்ணில் தொடரை 4-1 என்று கைப்பற்றி சாதனை படைத்தது.

இப்போட்டியில் இந்திய அணியின் நடசத்திர வீரரான டோனி, நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நிச்சம்மை ரன் அவுட் செய்த விதம், பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

பேட்ஸ்மேனை அசர வைத்து ரன் அவுட் செய்த டோனி, என்று கிரிக்கெட் வரணனையாளர்கள் அப்போது கூறினர்.

இதையடுத்து பிசிசிஐ தன்னுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் டோனி ஸ்டம்பிற்கு பின்னால் இருந்தால், கிரீசை விட்டு வெளியேறாதீர்கள் என்று டுவிட் செய்துள்ளது.

டோனி இதற்கு முன்பு பல ஸ்டம்பிங்களை பேட்ஸ்மேன் அசரும் நொடியில் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்