பேட்ஸ்மேனை அசர வைத்து ரன் அவுட் செய்த டோனி! அதிர்ச்சியில் வெளியேறிய நியூசிலாந்து வீரர் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான டோனி அசர வைத்து பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ஓட்டங்கள் எடுத்தது.

அதன் பின் ஆடிய நியூசிலாந்து அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சொதப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போட்டியில் 1 ஓட்டம் மட்டும் எடுத்து ஏமாற்றிய டோனி, தன்னுடைய துல்லியமான ரன் அவுட் மூலம் ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளார்.

ஆட்டத்தின் 37-வது ஓவரை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் கீதர் ஜாதவ், எதிர்திசை துடுப்பாட்ட வீரர் ஜேம்ஸ் நிச்சமிற்கு வீசினார்.

அப்போது பந்தானது, கால்காப்பில் பட்டதால், அனைவரும் LBW-வுக்கு முறையிட, டோனி தன்னுடைய சாமார்த்தியத்தால், நடுவரிடம் அவுட் கேட்பது போல், நிச்சிம்மை ரன் அவுட் செய்தார். அசால்ட்டாக இருந்த நிச்சிம் டோனி அவுட் செய்தவுடன் அதிர்ச்சியில் வெளியேறினார்

அந்த வீடியோவை டோனி ரசிகர்ள் சமூகவலைத்தளங்களில் டிரண்டாக்கி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers