சரிந்த இந்திய அணியை தூக்கி நிறுத்திய ராயுடு-பாண்டியா! வீழ்ந்த நியூசிலாந்து அணி

Report Print Kabilan in கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

நியூசிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வெலிங்டனில் நடந்து வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

தொடக்க வீரர்கள் கேப்டன் ரோஹிச் ஷர்மா, ஷிகார் தவான் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆகினர். பின்னர் வந்த சுப்மான் கில் 7 ஓட்டங்களில் ஹென்றி பந்துவீச்சிலும், டோனி ஒரு ரன்னில் போல்ட் பந்து வீச்சிலும் வெளியேறினர்.

இதனால் இந்திய அணி 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில் அம்பத்தி ராயுடுவும், விஜய் ஷங்கர் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியின் ஆட்டத்தின் மூலம் இந்திய அணி 100 ஓட்டங்களை தாண்டியது.

Hagen Hopkins/Getty Images

விஜய் ஷங்கர் 45 ஓட்டங்களில் ரன்-அவுட் ஆனார். பின்னர் கேதார் ஜாதவ் களமிறங்கினார். இந்த கூட்டணி அதிரடி காட்டியதில் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. சதத்தை நெருங்கிய நிலையில் ராயுடு 90 ஓட்டங்களில் அவுட் ஆனார். இதில் 8 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் அடங்கும்.

அணியின் ஸ்கோர் 203 ஆக இருந்தபோது கேதார் ஜாதவ் 34 ஓட்டங்களில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா அதிரடியில் மிரட்டினார். ஒரே ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்கள் அடித்து அசத்திய அவர், 22 பந்துகளில் 5 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 45 ஓட்டங்கள் விளாசினார்.

AP

புவனேஷ்வர்குமார், ஷமி அவுட் ஆனதைத் தொடர்ந்து இந்திய அணி 49.5 ஓவரில் 252 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தரப்பில் ஹென்றி 4 விக்கெட்டுகளையும், போல்ட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

விஜய் ஷங்கர் 45 ஓட்டங்களில் ரன்-அவுட் ஆனார். பின்னர் கேதார் ஜாதவ் களமிறங்கினார். இந்த கூட்டணி அதிரடி காட்டியதில் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. சதத்தை நெருங்கிய நிலையில் ராயுடு 90 ஓட்டங்களில் அவுட் ஆனார். இதில் 8 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் அடங்கும்.

அணியின் ஸ்கோர் 203 ஆக இருந்தபோது கேதார் ஜாதவ் 34 ஓட்டங்களில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா அதிரடியில் மிரட்டினார். ஒரே ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்கள் அடித்து அசத்திய அவர், 22 பந்துகளில் 5 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 45 ஓட்டங்கள் விளாசினார்.

AFP

புவனேஷ்வர்குமார், ஷமி அவுட் ஆனதைத் தொடர்ந்து இந்திய அணி 49.5 ஓவரில் 252 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தரப்பில் ஹென்றி 4 விக்கெட்டுகளையும், போல்ட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக முன்ரோ மற்றும் நிக்கோலஸ் களமிறங்கினர். ஷமியின் பந்துவீச்சில் நிக்கோலஸ் 8 ஓட்டங்களில் அவுட் ஆனார்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுமையான ஆட்டத்தை கடைபிடித்தார். இந்நிலையில் முன்ரோ(24) ஷமி பந்துவீச்சிலும், டெய்லர்(1) பாண்டியா பந்துவீச்சிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

அணியின் ஸ்கோர் 105 ஆக இருந்தபோது வில்லியம்சன் 73 பந்துகளில் 3 பவுண்டரிகளில் 39 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய நீஷம் அதிரடியில் இறங்கினார்.

லாதம் 37 ஓட்டங்களில் அவுட் ஆன நிலையில், பின்னர் வந்த கிராண்ட்ஹோம் 11 ஓட்டங்களில் அவுட் ஆனார். அதிரடி காட்டிய நீஷம் 32 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 44 ஓட்டங்கள் எடுத்தார்.

அதன் பின்னர் நியூசிலாந்தின் விக்கெட்டுகள் சரிந்ததால், அந்த அணி 44.1 ஓவரில் 217 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் சஹால் 3 விக்கெட்டுகளையும், ஷமி மற்றும் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஒருநாள் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

GETTY IMAGES
BCCI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்