டோனியின் ஸ்டெம்பை தெறிக்கவிட்ட நியூசிலாந்து வீரர்! ஒன்றுமே செய்ய முடியாமல் வெளியேறிய வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டோனியின் ஸ்டெம்பை டிரணட போல்ட் தெறிக்கவிட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடி வரும் இந்திய அணி, நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.

துவக்க வீரர்களான ரோஹித்(2), ஷிகர் தவான்(6), சுப்மா கில்(7), டோனி(1) என வந்த வேகத்தில் பெளலியன் திரும்பினர்.

இருப்பினும் ராயுடு மற்றும் விஜய் சங்கர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், விஜய் சங்கர(45) ஓட்டங்கள் எடுத்து தேவையில்லாமல் ரன் அவுட் ஆகினார்.

இதனால் இந்திய அணி சற்று முன் வரை 31.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 116 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரண்ட் போல்ட், டோனிக்கு வீசிய போது, அதை டோனியால் சரியாக கணித்து ஆட முடியவில்லை. இதனால் டோனி போல்டாகி வெளியேறினார்.

அதில் டோனியின் ஸ்ட்ம்பை தெறிக்கவிட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்