பவுன்சர் பந்து தாக்கி சுருண்டு விழுந்த இலங்கை வீரர் எப்படியிருக்கிறார்? வெளியான தகவல்

Report Print Raju Raju in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் வீசியபந்து கழுத்தில் தாக்கியதில் சுருண்டு விழுந்த கருணரத்னே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. 2வது டெஸ்ட் போட்டி கான்பராவில் நடைப்பெற்று வருகின்றது.

நேற்று நடந்த 2வது நாள் ஆட்டத்தின் போது இலங்கை தொடக்க வீரர் திமுத் கருணரத்னே 45 ரன்கள் எடுத்திருந்த போது பாட் கம்மின்ஸ் வீசிய பந்து கருணரத்னேவின் கழுத்தில் பட்டது. இதனால் மைதானத்தில் நிலை குழைந்து விழுந்தார். இதையடுத்து சிறுது நேரத்தில் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

அதில் கருணரத்னேவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, சிறிது ஓய்வு மட்டும் தேவை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கருணரத்னே இன்று மீண்டும் பேட்டிங் தொடங்கினார்.

அவர் 59 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers