8 விக்கெட்டுகள் வீழ்த்திய ரஸ்டன்! 381 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தெறிக்க விட்ட மேற்கிந்திய தீவுகள்

Report Print Kabilan in கிரிக்கெட்

பார்படாஸில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 381 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அபார வெற்றி பெற்றது.

மேற்கிந்திய தீவுகள்-இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி பார்படாசில் நடைபெற்றது. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 289 ஓட்டங்கள் எடுத்தது. ஹெட்மையர் அதிகபட்சமாக 81 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 77 ஓட்டங்களில் சுருண்டது. மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் கேமர் ரோச் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி ஹோல்டர்(202), டவ்ரிச்(116) ஆகியோரின் அபார சதத்தால் 6 விக்கெட் இழப்புக்கு 415 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

AFP

இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 628 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் 14 ஓட்டங்களிலே வெளியேறினார்.

அதன் பின்னர் அரைசதம் கடந்த பர்ன்ஸ் 84 ஓட்டங்களிலும், பேர்ஸ்டோ 30 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து வந்த வீரர்களின் விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர் ராஸ்டன் சேஸ் கைப்பற்றினார்.

அவரது சுழலில் சிக்கிய இங்கிலாந்து அணி 246 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 381 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ராஸ்டன் சேஸ் 60 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது டெஸ்டில் அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும். இரட்டை சதம் அடித்த ஹோல்டர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலை பெற்றுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்