பீல்டர் வீசிய பந்தில் வசமாக அடி வாங்கிய இந்திய வீரர் அம்பத்திராயுடு! கீப்பரிடம் முறையிட்ட வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பீல்டர் வீசிய பந்தில் அம்பத்தி ராயுடு அடிவாங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதலிரண்டு இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்று முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரரான ராயுடு ஓட்டம் எடுப்பதற்காக ஓடியுள்ளார்.

அப்போது அவர் தன்னுடைய மறுமுனை கீரிசை அடைந்த போது, பந்தைப் பிடித்த பீல்டிர் அவரை ரன் அவுட் செய்துவிட வேண்டும் என்பதற்காக கீப்பரை நோக்கி வேகமாக எறிந்தார்.

ஆனால் பந்தானது கீப்பரிடம் செல்வதற்கு முன், கிரீசை நோக்கி ஓடி வந்த ராயுடுவின் முதுகில் தாக்கியது.

இதனால் ராயும் அவ்வளவு இடம் இருக்கிறதே என்பது போல் விக்கெட் கீப்பரிடம் செய்கை செய்தார். இதனால் அவருக்கு எந்த ஒரு பலமான அடியும் ஏற்படவில்லை. அதன் பின் ஆடிய ராயும் 47 ஓட்டங்கள் எடுத்த நிலையில் லாக்கிபெர்குசன் பந்து வீச்சில் அவுட்டாகி பெளலியன் திரும்பினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்