அவுட் என தெரிந்தும் வெளியேற மறுத்த இந்திய வீரர் வீடியோ! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணி வீரரான புஜாரா ரஞ்சி டிராபி தொடரில் அவுட் என தெரிந்தும் மைதானத்தை விட்டு வெளியேறாமல் இருந்ததால், இணையவாசிகள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

மாநில அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டிராபி உள்ளூர் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இதில் பெங்களூருவில் நடைபெற்று வரும் 2-வது அரையிறுதிப் போட்டியில், கர்நாடக அணியும், சவுராஷ்டிரா அணியும் விளையாடின.

இப்போட்டியில் முதலில் ஆடிய கர்நாடகா அணி 275 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அதன் பின் களமிறங்கிய சவுராஷ்ட்ரா அணிக்கு புஜாரா நான்காவது வீரராக களமிறங்கினார்.

அப்போது புஜாரா ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் எதிரணியின் வேகப்பந்து வீச்சாளர் மிதுன் வீசிய பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார்.

புஜாரா அவுட்டான சந்தோஷத்தில் கர்நாடக வீரர்கள் துள்ளி குதித்தனர். ஆனால், அம்பயர் அவுட் வழங்கவில்லை.

டிவி ரீப்ளேயில் புஜாரா அவுட் என்பது தெளிவாகத் தெரிந்தது. தான் அவுட் எனத் தெரிந்தும் அவர் மைதானத்தை விட்டு வெளியேறவில்லை.

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் பெருமையாக பேசப்பட்ட புஜாரா, இப்படி ஒரு கீழ்த்தரமா நடந்து கொள்வது நம்ம முடியவில்லை என்று இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் சில தினங்களுக்கு முன்பு தான் அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஹைடன், அவுஸ்திரேலியா வீரர்கள் புஜாராவிடம் இருந்து சிறப்பாக விளையாட கற்று கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்