இரண்டாவது முறையாக ஐசிசி விருது வென்ற இலங்கை நடுவர் குமார் தர்மசேனா! குவியும் வாழ்த்து

Report Print Kabilan in கிரிக்கெட்

2018ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி-யின் சிறந்த நடுவர் விருதினை இலங்கையின் குமார் தர்மசேனா 2வது முறையாக வென்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2018ஆம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியலை அறிவித்துள்ளது. இதில் இலங்கையின் குமார் தர்மசேனா, ஐ.சி.சி 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த நடுவர் விருதினை பெற்றுள்ளார்.

இவர் ஏற்கனவே கடந்த 2012ஆம் ஆண்டு சிறந்த நடுவர் விருதினை வென்றுள்ளார். இதேபோல், ஐ.சி.சி-யின் டெஸ்ட் லெவன் அணியில் இலங்கை அணி வீரர் டிமூத் கருணரத்னே இடம்பிடித்துள்ளார்.

Getty Images

சிறந்த அசோசியேட் அணி வீரர் விருதை ஸ்காட்லாந்து அணியின் காலெம் மெக்லியாட் வென்றுள்ளார். இந்திய வீரர்களில் விராட் கோஹ்லி மூன்று விருதுகளையும் (ஒருநாள் போட்டி வீரர், டெஸ்ட் போட்டி வீரர் மற்றும் கிரிக்கெட் வீரர்), ரிஷாப் பண்ட் சிறந்த வளர்ந்து வரும் வீரர் விருதையும் வென்றுள்ளனர்.

PTI

ஐ.சி.சி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதினை நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பெற்றுள்ளார். இவர் களத்திலும், களத்திற்கு வெளியேயும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக நடந்துகொள்வதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

சிறந்த டி20 செயல்பாடு விருதினை ஆரோன் பின்ச் பெற்றுள்ளார். இவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 76 பந்துகளில் 172 ஓட்டங்கள் விளாசினார். இதில் 16 பவுண்டரிகள், 10 சிக்சர்கள் அடங்கும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்