ஹாட்ரிக் விருதுகள்.. புதிய வரலாறு படைத்த விராட் கோஹ்லி!

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி ஐ.சி.சி-யின் மூன்று விருதுகளுக்கு தெரிவாகி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

2018ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த கிரிக்கெட் வீரர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் வீரர் ஆகிய மூன்று விருதுகளுக்கும் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனை ஐ.சி.சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.சி.சி வெளியிட்ட அறிவிப்பில், ‘ஐ.சி.சி-யின் 3 விருதுகள் மட்டுமல்லாமல், ஐ.சி.சி டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாகவும் விராட் கோஹ்லி அறிவிக்கப்பட்டுள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஓர் ஆண்டில் ஐ.சி.சி-யின் 3 விருதுகளையும் பெற்ற முதல் துடுப்பாட்ட வீரர் என்ற புதிய வரலாற்றை கோஹ்லி படைத்துள்ளார். அத்துடன் ஐ.சி.சி சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதைத் தொடர்ந்து 2வது ஆண்டாக பெறும் விராட் கோஹ்லி, ஐ.சி.சி சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒருநாள் வீரருக்கான விருதையும் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்த ஆண்டு முதல்முறையாக ஐ.சி.சி டெஸ்ட் வீரருக்கான விருதை பெற்றுள்ள கோஹ்லி, ஒட்டுமொத்தமாக 5 சிறப்புகளை கோஹ்லி பெற்றுள்ளார். இந்த விருதுகள் குறித்து விராட் கோஹ்லி கூறுகையில்,

‘இந்த விருது ஆண்டு முழுவதும் கடினமாக உழைத்த அனைவருக்குமானது. ஏராளமான வீரர்கள் விளையாடும் நிலையில், ஐ.சி.சியி சிறப்பு மிக்க விருதுகளை நாம் பெறும்போது மிகப்பெருமையாக இருக்கிறது.

உண்மையில் எனக்கு பெருமை மிக்க தருணம். இந்த விருது எனக்கு இன்னும் ஆர்வமாக விளையாட உத்வேகத்தை அளிக்கும். தொடர்ந்து விருதுகளைப் பெற ஆர்வத்தைத் தூண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்