கோஹ்லியின் சாதனையை முறியடித்த தென் ஆப்பிரிக்கா வீரர் ஆம்லா! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தாலும், அவரை தென் ஆப்பிரிக்கா ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 266 ஓட்டங்கள் எடுத்தது.

தொடக்க வீரர் ஹாசிம் ஆம்லா 120 பந்துகளை சந்தித்து 108 ஓட்டங்கள் எடுத்து இறுதி வரை நாட் அவுட்டாக திகழ்ந்தார்.

ஒரு நாள் போட்டிகளில் மொத்தம் 167 இன்னிங்சில் விளையாடி தனது 27-வது ஒரு நாள் சதத்தை அம்லா அடித்துள்ளார்.

சச்சினுக்கு பிறகு இந்திய அணியின் ரன் மெஷினாக அழைக்கப்படும் விராட் கோஹ்லி, 169 இன்னிங்ஸில் 27வது ஒருநாள் சதத்தை அடித்திருந்தார். அதனை ஆம்லா தற்போது முறியடித்துள்ளார்.

ஆம்லா இந்தச் சாதனையைப் படைத்திருந்தாலும், அவரது ஆமை வேக ஆட்டத்தை சுயநல இன்னிங்ஸ் என்று சமூக தளங்களில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்களே விமர்சித்து வருகின்றனர்.

120 பந்துகளை சந்தித்து, வெறும் 7 பவுண்டரி, 1 சிக்ஸ் அடித்து 108 ஓட்டங்களே எடுத்தார். இதனால், 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தாலும் அந்த அணியால் 266 ஓட்டங்களே எடுக்க முடிந்தது.

சவால் இல்லாத இந்த இலக்கை, 49.1வது ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் சேஸிங் செய்து வெற்றி பெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers