கடைசி ஓவரில் கெத்தாக சிக்ஸர் அடித்து ஜெயிக்க வைத்த டோனி வீடியோ! அதிர்ந்த அவுஸ்திரேலியா மைதானம்

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான கடைசி ஓவரில் டோனி சிக்ஸர் அடித்த போது அரங்கமே அதிர்ந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அடிலெய்டில் நடைபெற்ற அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டோனி சிறப்பாக விளையாடி கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கினார்.

54 பந்துகள் சந்தித்த இவர் 55 ஓட்டங்கள் குவித்தார். இதில் 2 சிக்ஸர் அடங்கும். முதல் ஒருநாள் போட்டியில் டோனியின் ஆமைவேக ஆட்டம் யாருக்கும் உதவாது என்று முன்னணி வீரர்கள் பலரும் கூறி வந்த நிலையில், டோனியின் இந்த அடி அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருந்தது.

அணியின் தலைவரான கோஹ்லி கூட, டோனியை புரிந்து கொள்ளவே முடியாது. அவர் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரர் என புகழ்ந்து தள்ளினார்.

இந்நிலையில் டோனி கடைசி ஓவரி சிக்ஸர் அடித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிக்ஸர் அடித்தவுடன் அங்கிருந்த ரசிகர்களின் சத்ததால், அரங்கமே அதிர்ந்தது என்று கூறலாம்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers