உலகின் மிகசிறந்த கேட்ச்: வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட ரசிகர்!

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் டி20 போட்டியில் வீரர் ஒருவர் சிக்ஸருக்கு விளாசிய பந்தை ரசிகர் ஒருவர் பிடிக்க முயன்ற காட்சிகள் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அவுஸ்திரேலியாவில் களைகட்டும் பிக் பேஷ் லீக் டி20 தொடரின் எட்டாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் மெல்போர்ன் அணிகள் மோதிய ஆட்டத்தின் நடுவில் நடந்த ஒரு நிகழ்வு அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

அது 14-வது ஓவரில் பிரிஸ்பேன் ஹீட் அணியைச் சேர்ந்த வீரர் கிறிஸ் லின் நேராக சிக்ஸ் ஒன்றை விளாசினார்.

அடித்த பந்தை பிடிக்க முயன்றவர் செய்ததுதான் இந்த நிகழ்வின் உச்சமாக ரசிகர்கள் பலரால் கொண்டாடப்படுகிறது.

நேராக வந்த பந்தை பார்த்த ரசிகர் ஒருவர் ஆர்வ மிகுதியால் பார்வையாளர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த சைட் ஸ்கிரீன் மேல் ஓடி அந்த பந்தை பிடிக்க முயன்றார்.

ஆனால் கடைசி நேரத்தில் தடுமாறி கீழே விழுந்த அவர் கேட்ச்சையும் தவறவிட்டார். பிடித்திருந்தால் உலகின் மிகசிறந்த கேட்ச் இதுவாக ஆகியிருக்கும் இது என கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

பிக் பேஷ்ஷின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கமும் இதைக் கூறி குறித்த காணொளியை பகிர்ந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers