செத்த பாம்பை அடித்துவிட்டு என்ன வீராப்பு? இந்திய அணியை கிண்டல் செய்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் தற்போது பாகிஸ்தான் அணி விளையாடினால் கூட, வரலாற்று வெற்றி படைக்கும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் முகமது யூசப் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டி20 தொடர் 1-1 என சமநிலையிலும், டெஸ்ட் தொடர் 2-1 என இந்தியா அணியும் கைப்பற்றி சாதனை படைத்தது.

அவுஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியதால், அணியின் தலைவர் கோஹ்லி, பயிற்சியாளர ரவிசாஸ்திரி மற்றும் அணியில் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரான முகமது யூசப் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் தற்போது பாகிஸ்தான் அணி பங்கேற்றால் கூட கோப்பை வென்று சாதிக்கும் என கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், அவுஸ்திரேலியாவில் இந்திய அணி சாதித்தது மிகப்பெரிய சாதனை.

ஆனால் அதேநேரம் பாகிஸ்தான் அணியும் யு.ஏ.இ.யில் நடந்த டெஸ்ட் தொரை அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக வென்றுள்ளது. அது தான் தற்போதுள்ள அவுஸ்திரேலியா அணியின் பலம்

என்னைப்பொறுத்தவரையில் அவுஸ்திரேலியா அணியை ஒப்பிடும் போது, இந்தியா, பாகிஸ்தான் இரு அணிகளுமே தற்போது பலமான அணிகள் தான்.

தற்போது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டால், பாகிஸ்தான் அணியும் தொடரை வென்று வரலாறு படைக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers