போட்டியின் இடையே மைதானத்திற்கு வந்த மகன்.. கட்டித் தழுவி முத்தமிட்ட ஷேன் வாட்சன்! நெகிழ்ச்சி தருணம்

Report Print Kabilan in கிரிக்கெட்

பிக் பாஷ் லீக் தொடரில் போட்டியின் இடையில் மைதானத்திற்கு வந்த தனது மகனை ஷேன் வாட்சன் கட்டித் தழுவிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றது.

அவுஸ்திரேலிய அணி வீரர் ஷேன் வாட்சன் தற்போது பிக்பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் அடிலெய்டு அணிக்கு எதிராக வாட்சன் 40 பந்துகளில் 68 ஓட்டங்கள் குவித்தார்.

அதனைத் தொடர்ந்து 169 ஓட்டங்கள் இலக்கினை நோக்கி அடிலெய்டு அணி விளையாடி வருகிறது. இதற்கிடையில் வாட்சன் பீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது அவரது மகன் மைதானத்திற்கு வந்துள்ளார்.

அவரது தொப்பி மற்றும் டி-ஷர்ட்டில் கையெழுத்திட்ட வாட்சன், தனது மகனை கட்டியணைத்து முத்தமிட்டு அனுப்பினார். இச்சம்பவம் மைதானத்தில் இருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers