பாண்டியா-ராகுலுக்கு பதிலாக களமிறங்கும் தமிழக வீரர்! பிசிசிஐ அறிவிப்பு

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய அணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் மற்றும் சுப்மான் கில் ஆகியோரை களமிறக்குவதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

தனியார் டி.வி நிகழ்ச்சி ஒன்றில் இந்திய அணி வீரர்கள் பாண்டியா, ராகுல் ஆகியோர் சர்ச்சைக்குரிய கருத்து கூறியதைத் தொடர்ந்து, இருவரையும் இடைநீக்கம் செய்ததுடன் ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பி.சி.சி.ஐ உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து, இவர்கள் இருவருக்கும் மாற்றாக வீரர்கள் விரைவில் தெரிவு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

AFP

அதன்படி, நேற்று இரவு ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் வீரர் விஜய் சங்கர் விளையாடுவார் என்றும், நியூசிலாந்து தொடரில் சுப்மான் கில் விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

விஜய் சங்கர் வரும் 15ஆம் திகதி நடைபெறும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வீரர் விஜய் சங்கருக்கு 2வது முறையாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு முன்பு அவர், கடந்த 2018ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த நிதாஹஸ் கிண்ண தொடரில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers