எந்த ஒரு அணியும் செய்யாத சாதனையை படைத்த அவுஸ்திரேலிய அணி

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், அவுஸ்திரேலிய அணி தன்னுடைய ஆயிரமாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்திய அணியானது அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இன்று நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்களை குவிந்திருந்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பாக பீட்டர் ஹான்சாம்கோப் 73 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.

இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர்.

இதில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ரோகித்சர்மா 133 ரன்கள் குவித்திருந்தார். அவுஸ்திரேலிய அணி சார்பில் ஜெய் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச போட்டியில் 1000 வெற்றிகளை கண்ட முதல் அணி என்ற பெருமையினை அவுஸ்திரேலிய அணி பெற்றுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers