அம்பத்தி ராயுடுவை வந்த வேகத்தில் பெளலியன் அனுப்பிய அவுஸ்திரேலிய வீரர்! வெளியான வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் அம்பத்திராயுடு ஓட்டம் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் பெளலியன் திரும்பிய வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் ஆடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ஓட்டங்கள் எடுத்தது.

அதன் பின் ஆடி வரும் இந்திய அணி சற்று முன் வரை 44.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 214 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக்காக போராடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் இரண்டாவது துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மாவும், தவானும் ஆட்டத்தை தொடங்கினர்.

முதல் ஓவரின் கடைசி பந்தில் தவான் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை அறிமுக வீரராக களமிறங்கிய ஜேசன் பேரன்டோர்ப் வீழ்த்தினார்.

அடுத்து கோஹ்லி வந்தார். நின்று ஓட்டங்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோஹ்லி வெறும் 3 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில், ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் ஸ்டோயினிசிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்

இப்படி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்த போது, நான்காவது வீரராக களமிறங்கிய ராயுடு 2 பந்துகள் சந்தித்து ஓட்டம் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் பெளலியன் திரும்பினார்.

அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்