மிரட்டிய மலிங்கா.. சொதப்பிய துடுப்பாட்ட வீரர்கள்! டி20ஐயும் கைப்பற்றிய நியூசிலாந்து

Report Print Kabilan in கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இலங்கை அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்கள் எடுத்தது.

மிரட்டலாக பந்துவீசிய மலிங்கா, 4 ஓவர்களில் 24 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் மற்ற பந்துவீச்சாளர்கள் பெரிதாக சோபிக்கவில்லை.

நியூசிலாந்து தரப்பில் பிரேஸ்வெல் 26 பந்துகளில் 44 ஓட்டங்கள் விளாசினார். ஸ்காட் குக்கிலெயின் 15 பந்துகளில் 35 ஓட்டங்கள் குவித்தார்.

பின்னர் ஆடிய இலங்கை அணியில், திசாரா பெரேராவை தவிர மற்ற துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்கள் வெளியேறினர். இதனால் இலங்கை அணி 16.5 ஓவர்களில் 144 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அதிகபட்சமாக திசாரா பெரேரா 24 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 43 ஓட்டங்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் பெர்குசன், சோதி ஆகியோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஏற்கனவே, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்த இலங்கை அணி டி20 போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது. அடுத்ததாக அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை பங்கேற்க உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers