டோனியிடம் தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்ட ஹர்திக் பாண்ட்யா! வெளியான தகவல்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் இளம் வீரரான ஹர்திக் பாண்ட்யா பெண்கள் குறித்து தவறாக பேசியதற்கு அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் டோனி ஆகியோரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை2-1 என்று கைப்பற்றி சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீரர்களான பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்தனர்.

இதனால் இருவருக்கும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 ஒரு நாள் ஆட்டங்கள் ஆட தடைவிதிக்கலாம் என பிசிசிஐ சிஓஏ வினோத் ராய் பரிந்துரைத்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 24 மணி நேரத்துக்குள் விளக்கமளிக்குமாறு பாண்டியா மற்றும் ராகுலுக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியது.

இது குறித்து பாண்டியா தனது மன்னிப்பு கோரி இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக லோகேஷ் ராகுல் இதுவரை பிசிசிஐ நோட்டீஸுக்கு பதிலளிக்கவில்லை.

இது தொடர்பாக சிஓஏ விசாரணை மேற்கொண்டது. மற்றொரு உறுப்பினரான டயானா எடுல்ஜி, பிசிசிஐ சட்டப்பிரிவின் பரிசீலனைக்கு அனுப்பி உள்ளார்.

பிசிசிஐ பொருளாளர் அனிருத் செளதரியும் தடைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இருவரும் எவ்வாறு பங்கேற்றனர் என விசாரணை செய்ய வேண்டும்.

வீரர்களை அண்டாமல் விளையாட்டு பத்திரிகையாளர்களை ஒதுக்கி வைக்கும் நிலையில் இதுபோன்ற கேளிக்கை நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றது வியப்பை தருகிறது என்று செளதரி கூறியுள்ளார்.

இது குறித்து இந்திய அணியின் தலைவரான கோஹ்லி பாண்டியா, ராகுல் ஆகியோரின் கருத்துகளை இந்திய அணி ஆதரிக்கவில்லை என கூறினார்.

இதைத் தொடர்ந்து பாண்ட்யா இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் டோனி ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்