ரிஷாப் பண்டை இப்போதே புகழின் உச்சில் தூக்கி வைக்க வேண்டாம்: இந்திய முன்னாள் வீரர் கருத்து

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட்-யின் கீப்பிங்கில் டெக்னிக்கல் பிரச்சனை இருக்கிறது என இந்திய முன்னாள் வீரர் பரூக் என்ஜினீயர் கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போதைய இந்திய அணியில் துடிப்புடன் செயல்படும் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங்கிலும் கலக்கினார். இதனைத் தொடர்ந்து நாளை நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்க உள்ளார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பரூக் என்ஜினீயர் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட்-யின் கீப்பிங் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘ரிஷாப், எனது இளமை காலத்தை ஞாபகப்படுத்துகிறார். அவரது அணுகுமுறை டோனியைப் போன்றே இருக்கிறது. ஆனால் இப்போதே அவரை புகழின் உச்சத்தில் தூக்கி வைக்க வேண்டாம்.

ஆனால், அவரை ஊக்கப்படுத்துங்கள். ஆனால் டெக்னிக்கலாக அவர் சரியாக விளையாடவில்லை. தவறு இருக்கிறது. அவர் அதை திருத்த நேரம் கொடுக்க வேண்டும். அவர் தன் திறமையை கண்டிப்பாக மேம்படுத்துவார்.

நல்ல விக்கெட் கீப்பர் கால்களை அங்கும் இங்கும் இயக்க வேண்டும். பந்தை நோக்கியே ஓட வேண்டும். எல்லா நேரமும் டைவ் அடிக்க வேண்டிய அவசியமில்லை. கால்களை சரியாகப் பயன்படுத்தினாலே போதும்’ என தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட பரூக் என்ஜினீயர், 46 டெஸ்ட் போட்டிகளில் 66 கேட்சுகள் மற்றும் 16 ஸ்டம்பிங் செய்தவர் ஆவார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்