நடுவரிடம் சேட்டை சேய்த கோஹ்லி! அவசரப்பட்டு விக்கெட்டை இழந்து வெளியேறிய வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி நடுவரிடம் பந்தை வாங்கி நேரத்தை போக்கும் வகையில் பேட்டை வைத்து விளையாடியதால், நடுவர் அந்த பந்தை பிடுங்கினார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 303 ஓட்டங்கள் எடுத்த ஆடி வருகிறது.

இதில் சட்டீஸ்வர் புஜாரா சிறப்பாக ஆடி சதமடித்து 130 ஓட்டங்களுடன் ஆடி வருகிறார்.

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் தலைவரான கோஹ்லி,சற்று குறும்புத்தனமான சேட்டை செய்தார்.

தேநீர் இடைவேளை முடிந்த பிறகு அவுஸ்திரேலியா வீரர்கள் மைதானத்திற்குள் வருவதற்கு சற்று தாமதமானதால், நேரத்தை போக்கும் வகையில் கோஹ்லி, நடுவரிடம் இருந்த பந்தை வாங்கி தனது பேட்டால் தட்டி கொண்டே இருந்தார்.

இதனை கண்ட நடுவர் கோஹ்லியின் சேட்டையை தடுத்து நிறுத்தி பந்தை அவரிடம் இருந்து வாங்கினார்.

அதன் பின் அவுஸ்திரேலியா வீரர்கள் வந்து விட்டதால், கோஹ்லி, புஜாராவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

இந்த அனுபவ ஜோடி இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்த்த போது, ஹசல்வுட் வீசிய பவுன்சர் பந்தை தேவையில்லாமல் கோஹ்லி அவசரப்பட்டு அடித்து ஆட, அது விக்கெட் கீப்பர் கையில் தஞ்சம் புகுந்தது.

இதனால் கோஹ்லி விக்கெட் இழந்தவுடன், அடுத்து வந்த ரகானேவும் 18 ஓட்டங்களில் நடையை கட்டினார். கோஹ்லி கொஞ்சம் பொறுமையாக விளையாடினால், இந்திய அணியின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers