நங்கூரம் போல் விளையாடிய புஜாரா இப்படியா அவுட்டாகனும்? அவுஸ்திரேலியா வீரரின் அனல் பறக்கும் ரன் அவுட்

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய புஜாராவை அந்தணி வீரர் கம்மின்ஸ் தன்னுடைய அற்புதமான பீல்டிங்கால் ரன் அவுட் செய்துள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று துவங்கியது.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 250 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்த இன்னிங்ஸில் கோஹ்லி, ரகானே போன்ற வீரர்கள் சொதப்பியதால், 150 ஓட்டங்களை கூட இந்தியா தாண்டுமா என்று இருந்த போது, சட்டீஷ்வர் புஜாரா நங்கூரம் போல் நின்று இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார்.

இதனால் 246 பந்துகள் சந்தித்த அவர் சதமடித்து 126 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற இந்திய வீரர்கள் அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் திணறினாலும், புஜாரா மட்டும், அசால்ட்டாக விளையாடினார்.

இதனால் இவரை அவுட்டாக்க முடியாமல் அவுஸ்திரேலிய அணியினர் திணறினர்.

அது ஏன் அவுஸ்திரேலியாவின் நட்சத்திர பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஹேசில்வுட், நாதன் லயன் என யாராலும் புஜாராவின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.

களத்தில் ஆதிக்கம் செலுத்தி ஆடிய புஜாராவின் இன்னிங்ஸை அருமையான ரன் அவுட் மூலம் முடித்து வைத்தார் கம்மின்ஸ்.

மிட் ஆன் திசையில் அடித்துவிட்டு ஒரு ரன் எடுக்க முயன்றார் புஜாரா. ஆனால் அந்த பந்தை பிடித்த கம்மின்ஸ், ஸ்டம்புக்கு பக்கவாட்டில் இருந்து அருமையாக அடித்து ரன் அவுட் செய்தார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்