கோஹ்லியை கதிகலங்க வைத்த அவுஸ்திரேலிய வீரர்! மிரண்டுபோய் நின்ற வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், கவாஜா பிடித்த அசாத்தியமான கேட்சினால் விராட் கோஹ்லி 3 ஓட்டங்களில் பரிதாபமாக அவுட் ஆனார்.

இந்தியா-அவுஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற விராட் கோஹ்லி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், கேப்டன் கோஹ்லி களமிறங்கினார். ஆட்டத்தின் 11வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். அதனை எதிர்கொண்ட விராட் கோஹ்லி ட்ரைவ் ஷாட் ஆடினார்.

ஆனால் பந்து எட்ஜ் ஆகி கல்லியில் நின்றிருந்த கவாஜாவிடம் சென்றது. அவருக்கு இடது புறம் வேகமாக வந்த பந்தை ஒற்றைக் கையில் அசாத்தியமாக பிடித்தார் கவாஜா.

இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி பரிதாபமாக 3 ஓட்டங்களில் வெளியேறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்