பல கோடிக்கு விலை போன யுவராஜ் நிலைமை இப்படி ஆகிபோச்சே? ஐபிஎல் விலை மிகவும் குறைவு

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரராக வலம் வந்த யுவராஜ் சிங், தற்போது ஐபிஎல் ஏலத்தில் மிகவும் குறைவான விலைக்கு தயாராகியுள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடருக்கான இந்தாண்டு ஏலம் வரும் 18-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதில் வெளிநாடுகளைச் சேர்ந்த 232 வீரர்கள் உட்பட 1003 பேர் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் சொதப்பியதால் அணி நிர்வாகத்தால் கழற்றிவிடப்பட்ட வீரர்கள் எப்படியாவது குறைந்த விலையிலாவது ஏதாவது ஓர் அணியில் ஒட்டிக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளனர்.

இந்திய அணி நட்சத்திர வீரராக திகழ்ந்து தற்போது இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்ட யுவராஜ் சிங் மீண்டும் ஐபிஎல் தொடரில் தலைகாட்ட முயல்கிறார்.

இதற்காக மிகக் குறைந்த விலையாக ஒரு கோடி ரூபாய் அடிப்படை விலையுடன் ஏலத்துக்குத் தயாராக உள்ளார்.

இவரைப் போலவே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி, சுழற்பந்துவீச்சாளர் அக்ஸர் படேல் ஆகியோர் ஒரு கோடி ரூபாய் அடிப்படை விலையுடன் காத்திருக்கின்றனர்.

மேலும் இதற்கு முன்னர் நடந்த ஐபிஎல் தொடர்களில் யுவராஜ் சிங்கை அணிகள் 16 கோடி மற்றும் 14 கோடி எல்லாம் கொடுத்து எடுத்தனர்.

ஆனால் தற்போது 1 கோடியாவது கொடுத்து எடுங்கள் என்ற நிலைமைக்கு யுவராஜ் தள்ளப்பட்டிருப்பது, அவரது ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்