இப்படி ஒரு பெயரா? டெல்லி அணியின் புதிய பெயரை கலாய்த்துத் தள்ளும் நெட்டிசன்கள்

Report Print Kabilan in கிரிக்கெட்

ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான டெல்லி டேர்டெவில்ஸின் உரிமையாளர்கள், அதன் பெயரை மாற்றியுள்ளதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி கடந்த சில ஐ.பி.எல் தொடர்களில் Play-off முன்னேற முடியாமல் பட்டியலில் மிகவும் பின் தங்கியது. கடந்த 2018ஆம் ஆண்டு இதை விட மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

எனவே, டெல்லி அணியை இதிலிருந்து மீட்டெடுத்து ஒரு புத்துணர்வை தர வேண்டும் என அணி உரிமையாளரான ஜே.எஸ்.டபுள்யூ ஸ்போர்ட்ஸ், அணியின் பெயரை மாற்ற முடிவு செய்தது.

அதன்படி தற்போது ‘டெல்லி டேர்டெவில்ஸ்’ என்ற பெயரை ‘டெல்லி கேபிடல்(Delhi Capital)’ என மாற்றி வைத்துள்ளது. இதுகுறித்து ஜே.எஸ்.டபுள்யூ ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கூறுகையில்,

‘டெல்லியின் சிறப்பையும், டெல்லி மக்களிடம் இன்னும் நெருக்கமாகவும் இருக்கும் வகையில் டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரை மாற்றி டெல்லி கேபிடல் என வைத்துள்ளோம்’ என தெரிவித்துள்ளது.

ஆனால் ரசிகர்கள் இதனை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். பெயர் மாற்றத்திற்கு என்ன தான் அவசியம்? மோசமான நிலையில் இருந்து மீள வேண்டிய நிலையில் டெல்லி அணி உள்ளது.

அதனால் பெயர், லோகோ உட்பட அனைத்தையும் மாற்றி, புதிய முகத்தை 2019 ஐ.பி.எல் முதல் காட்ட முடிவு செய்துள்ளது. இவர்களின் எண்ணம் எல்லாம் சரிதான், ஆனால் நல்ல காலத்தை நோக்கி இருக்கும் ஒரு அணிக்கு இப்படியா ஒரு புரியாதா பெயரை வைப்பார்கள்? என ரசிகர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

ஒரு ரசிகர், டெல்லி அதிக காற்று மாசு உள்ள நகரமாக உள்ளது. அந்த காற்று மாசு டெல்லி மக்களின் மூளையை பாதித்து வருகிறது என்பதற்கு, இப்படி புரியாமல் பெயர் வைத்துள்ளதே சான்று என கூறியுள்ளார்.

மற்றொரு ரசிகர், புதிய பெயர் வைக்கும்போது பெயர் என்ன என கேட்டதற்கு டெல்லி, ஆங்கில கேபிடல் எழுத்துக்களில் (DELHI) என கூறியுள்ளனர். அதை புரிந்து கொள்ளாமல், டெல்லி கேபிடல் என்றே பெயர் வைத்து விட்டார்கள் என விமர்சித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்