அவுஸ்திரேலியா தொடரில் இது மட்டும் நடந்தா இந்திய அணி கீழே போய்விடும்: வெளியான தகவல்

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக இழந்தால், டெஸ்ட் அணிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை அடிலெய்டில் துவங்கவுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் இந்தியாவின் செயல்பாடு எப்படி இருக்கிறதோ அதைப் பொறுத்தே இந்தியா அணி தரவரிசைக்கான பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்குமா? அல்லது ஆஸ்திரேலியா அந்த இடத்தை பிடிக்குமா? என்பது தெரியும்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா 4-0 என கைப்பற்றினால் 102 புள்ளிகளுடன் இருக்கும்.

அவுஸ்திரேலியா அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறும். 116 புள்ளிகளுடன் இருக்கும் இந்தியா அணியின் புள்ளிகள் 110 ஆக குறைந்து 3-வது இடத்திற்க்கு தள்ளப்படும்.

அதே சமயம் இந்தியா ஒரே ஒரு போட்டி டிரா செய்தால் கூட போது இந்தியா அணி நம்பர் 1 இடத்திலேயே நீடிக்கும்.

மேலும் இந்தியா 4-0 என வெல்லும் பட்சத்தில் இந்தியா 120 புள்ளிகள் பெறும், அவுஸ்திரேலியா அணிக்கு 97 புள்ளிகளாக குறையும்.

அவுஸ்திரேலியா 3-0 என்று வென்றால் 109 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு முன்னேறலாம். 3-1 என வென்றால் அவுஸ்திரேலியா 107 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 2-வது இடத்திலும், இந்தியா 111 புள்ளிகளாக குறைந்து 1-வது இடத்திலும் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்