கண்டிப்பாக நமக்கு சாதகமாக இருக்காது: இலங்கை அணியின் வெற்றிக்காக சண்டிமாலின் முடிவு

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணியின் தலைவரான தினேஷ் சண்டிமால் அணியின் வெற்றிக்காக நான் எந்த இடத்திலும் இறங்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

இலங்கை அணி சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியுடன் மூன்று தொடரையும் இழந்ததால், தற்போது அந்தணி கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் மூன்று டெஸ்ட், இரண்டு ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி கடந்த 3-ஆம் திகதி நியூசிலாந்து சென்றது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சண்டிமால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஒரு சில தவறுகளை செய்துவிட்டோம்.

அந்த தவறுகளை எல்லாம் சரி செய்து, நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் சிறப்பாக விளையாடுவோம்.

தற்போது நாங்கள் விளையாடவுள்ள மூன்று தொடரிலும் எங்களுக்கு சாதகமாக மைதானம் இருக்கபோவதில்லை.

இதனால் போட்டி கடும் சவால் நிறைந்ததாக இருக்கும். இதை நாம் எப்படி எதிர்கொண்டு சமாளிக்கப்போகிறோம் என்பதில் கவனம் இருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி மைதானத்தின் தன்மையை பொறுத்து, இலங்கை அணியின் வெற்றிக்காக நான் எந்த இடத்திலும் இறங்க தயாராக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 15-ஆம் திகதி வெலிங்டனில் துவங்கவுள்ளது குறிப்பிடத்தகக்து.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்