டோனியை நாங்கள் எங்கிருந்து கண்டுபிடித்தோம்? பாகிஸ்தான் முன்னாள் பிரதமரிடம் கங்குலி சொன்ன பதில்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் நட்சத்திர வீரராக இருந்து வரும் டோனி, வாகா எல்லையில் நடந்து கொண்டிருந்த போது அப்படியே இந்திய அணிக்கு கொண்டு வந்துவிட்டதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் முஷரப்பிடம் கங்குலி தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக பார்ம் இன்றி தவிக்கும் டோனி, தன்னுடைய ஆரம்பகாலத்தில் ஒரு அபாயகரமான வீரராக இருந்தார். இவர் கடைசி வரை மைதானத்தில் இருந்தால், இந்திய அணி நிச்சயம் வெற்றி தான், அந்தளவிற்கு எதிரணி வீரர்கள் இவரைக் கண்டு பயப்படுவார்கள்.

அப்படி இருந்த டோனி தான், தற்போது அந்த பினிசிங்கை சரியாக கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார். கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அணியிலிருந்து தானாக விலகி வருகிறார் என்றும் கூறலாம்.

இந்நிலையில் இந்திய அணியின் வெற்றிக் கேப்டன்களில் ஒருவராக இருந்த கங்குலி, டோனி குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில், கடந்த 2006-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா விளையாடிய போது அப்போதைய பிரதமர் முஷாரப் , டோனியைக் காட்டி, இவரை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள் என்று கேட்டார்.

அதற்கு நான் வாகா எல்லையில் நடந்துகொண்டிருந்தவரை இந்திய அணிக்குள் கொண்டு வந்துவிட்டோம் என்று நகைச்சுவையாக பதிலளித்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்