அவுஸ்திரேலியாவை வீழ்த்திய பின் கெத்தாக தவான் செய்த செயல்: அரங்கத்தை அதிர வைத்த ரசிகர்கள் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி முடிந்த பின், தொடர் நாயகன் விருது வென்ற தவான் தொடையை தட்டி ரசிகர்களை நோக்கி கையை உயர்த்தி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே இரண்டாவது டி20 போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது.

இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 164 ஓட்டங்களை, இந்திய அணி அசால்ட்டாக எட்டிப் பிடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கோஹ்லி 61 ஓட்டங்களும், தவான் 41 ஓட்டங்களும் எடுத்தனர்.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற சமநிலையில் முடிந்தது. இந்நிலையில் இந்த டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவானுக்கு தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட்டது.

இதற்காக அவரை தொகுப்பாளர் மேடைக்கு அழைத்தார். தொடர் நாயகன் விருதை வாங்கிய அவர், அங்கிருந்த சிறுவனை தூக்கி விளையாடினார். அதன் பின் ரசிகர்களை நோக்கி தொடையை தட்டி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அப்போது அங்கிருந்த ரசிகர்கள் சத்தம் போட்டதால், மைதானமே தவான் என்று குரலிட்டது.

குறிப்பாக தொகுப்பாளர் இது இந்தியாவைப் போன்று இருக்கிறது அல்லவா என்று கேட்க, ஆம் இந்திய ரசிகர்கள் அதிகம் உள்ளனர் என்று அவர் கூற, மீண்டும் அரங்கமே அதிர்ந்தது.

அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers