கோஹ்லிக்கு இணையாக ரெக்கார்ட் செய்யும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்!

Report Print Kabilan in கிரிக்கெட்

டி20 போட்டிகளில் விராட் கோஹ்லிக்கு இணையாக, தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும் துடுப்பாட்டத்தில் அபாரமான சாதனையை செய்து வருகிறார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் விராட் கோஹ்லி-தினேஷ் கார்த்திக் ஜோடி அபாரமாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தது.

அணித்தலைவரான கோஹ்லி சேஸிங்கில் கடைசி வரை நின்று வெற்றிகளை பெற்று தருகிறார். அவருக்கு இணையாக தினேஷ் கார்த்திக்கும் சேஸிங்கில் அபாரமாக ஆடி, அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.

விராட் கோஹ்லி 20 டி20 போட்டிகளில் சேஸிங்கில் 10 அரைசதம் அடித்துள்ளார். இவற்றில் 12 முறை ஆட்டமிழக்காமல் ஓட்டங்களை சேர்த்துள்ளார். இந்த 12 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதில் கோஹ்லியின் சராசரி 120.60 ஆகும்.

அதே போல் தினேஷ் கார்த்திக்கும் கடைசியாக ஆடிய 12 டி20 போட்டிகளில், 9 முறை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து அணியை வெற்றி பெற வைத்துள்ளார். ஆனால், அவர் அவுட் ஆன மூன்று போட்டிகளிலும் இந்தியா தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers