இவர் திருந்த மாட்டாரா? மீண்டும் மோசமாக ரன் அவுட் ஆன பிரபல வீரர்.. வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் மீண்டும் சொதப்பலாக ரன் அவுட்டாகியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசார் அலி.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ள நியூசிலாந்து அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி 4 ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது நியூசிலாந்து அணி.

இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் துபாயில் நடக்கிறது. இதில் பாகிஸ்தான் அணி, 5 விக்கெட்டுக்கு 418 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி, மீண்டும் சொதப்பலான முறையில் ரன் அவுட்டானார்.

சமீபத்தில் கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத அளவு மிகவும் மோசமான முறையில் ரன் அவுட்டான அசார் அலி, அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மாற்றிக்கொள்ளாமல், மீண்டும் இப்படி மோசமான முறையில் ரன் அவுட்டானதை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கிண்டல் செய்து வருகிறார்கள்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers