கைக்கு வந்த கேட்சை கோட்டை விட்ட ரோகித் சர்மா! டென்ஷன் ஆன க்ருணல் பாண்ட்யா வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் கைக்கு வந்த கேட்சை ரோகித்சர்மா கோட்டை விட்டதால், பந்து வீச்சாளர் க்ருணல் பாண்டா கோபமடைந்தார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டி20 போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் விளையாடிய அவுஸ்திரேலியா அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் எடுத்தது.

அவுஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஆரோன் பின்ச் 28 ஓட்டங்களும், அலெக்ஸ் கெரே 27 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் க்ருணல் பாண்ட்யா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து ஆடி வரும் இந்திய அணி சற்று முன் வரை 15 ஓவர் முடிவில் 114 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து ஆடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் 7-வது ஓவரை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் க்ருணல் பாண்ட்யா பின்சிற்கு வீசினார்.

அப்போது எதிர்கொண்ட பின்ச் அடித்து ஆட, பந்தானது ரோகித் சர்மாவை நோக்கிச் சென்றது. சாதரணமான கேட்ச் தான் பிடித்துவிடுவார் என்று எதிர்பார்த்த போது, கேட்சை விட்டு, பாண்ட்யாவை கடுப்பாக்கினார்.

தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்