அவுஸ்திரேலிய அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி: கேப்டனுக்கு எச்சரிக்கை!

Report Print Kabilan in கிரிக்கெட்

பிரிஸ்பேனில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், பந்துவீச அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதற்காக அவுஸ்திரேலிய அணிக்கு ஐ.சி.சி அபராதம் விதித்துள்ளது.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டி20 போட்டி பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பிஞ்ச் கேப்டனாக செயல்பட்டார்.

முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி, 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் அணிக்கு 17 ஓவர்களாக மாற்றியமைக்கப்பட்டது.

இதனால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 174 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ஆடிய இந்திய அணி 17 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்கள் எடுத்ததால் தோல்வியை தழுவியது.

முன்னதாக, அவுஸ்திரேலிய அணி பந்துவீசியபோது குறிப்பிட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டது. இதனைத் தொடர்ந்து, அந்த அணிக்கு ஐ.சி.சி அபராதம் விதித்துள்ளது

இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஐ.சி.சி கிரிக்கெட் வீரர்கள் விதிமுறை 2.5.1-யின் படி, குறிப்பிட்ட நேரத்திற்குள் அவுஸ்திரேலிய வீரர்கள் பந்துவீசாமல், அதிகமான நேரம் எடுத்துக்கொண்டது குற்றமாகும்.

எனவே, போட்டி ஊதியத்தில் இருந்து அவுஸ்திரேலிய வீரர்கள் 10 சதவிதத்தை அபராதமாக செலுத்த வேண்டும். அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் 2 மடங்கு அபராதம் செலுத்த வேண்டும் என எச்சரிக்கிறோம்.

அடுத்து வரும் போட்டிகளில் தொடர்ந்து இதே தவறை அவுஸ்திரேலிய தலைவர் ஆரோன் பிஞ்ச் செய்தால், அவர் ஒரு போட்டிக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவார். இந்தக் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதால் விசாரணை ஏதும் தேவையில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்