இலங்கைக்கு எதிராக சதம் விளாசிய பேர்ஸ்டோ! முதல் நாளிலேயே 312 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 312 ஓட்டங்கள் குவித்துள்ளது.

இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் நேற்று தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய பர்ன்ஸ்-ஜென்னிங்ஸ் இருவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த பேர்ஸ்டோ நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜோ ரூட்டும் நிதானமாக ஆடினார்.

இவர்களின் கூட்டணி மூலம் இங்கிலாந்து அணி 100 ஓட்டங்களை கடந்தது. அணியின் ஸ்கோர் 136 ஓட்டங்களாக இருந்தபோது ஜோ ரூட் 46 ஓட்டங்களில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த பென் ஸ்டோக்ஸ் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளித்து ஆடினார்.

பேர்ஸ்டோ-ஸ்டோக்ஸ் கூட்டணி 99 ஓட்டங்களை சேர்த்தது. எனினும் இலங்கை சுழற்பந்து வீச்சாளார் சன்டகன் இந்த கூட்டணியை பிரித்தார். 57 ஓட்டங்கள் எடுத்திருந்த பென் ஸ்டோக்ஸ் தனஞ்ஜெயவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அதன் பின்னர், டெஸ்ட் அரங்கில் 6வது சதத்தை பதிவு செய்த பேர்ஸ்டோ 110 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லர் 16 ஓட்டங்களிலும், பென் போக்ஸ் 13 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 88.1 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 312 ஓட்டங்கள் குவித்துள்ளது. மொயீன் அலி 23 ஓட்டங்களுடனும், அடில் ரஷித் 13 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி தரப்பில் சன்டகன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

AFP
AP
REUTERS

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்