அவுஸ்திரேலிய போட்டியில் நடுவரிடம் ஆக்ரோசமாக சண்டை போட்ட கோஹ்லி: வெளியான வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் தலைவர் கோஹ்லி ஆக்ரோசமாக நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகிறது.

இந்தியா அணி, அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வித போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையே முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் டி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டி நேற்று துவங்கியது.

இதில் முதலில் அவுஸ்திரேலியா அணி ஆடிக் கொண்டிருந்த போது, மழை குறுக்கிட்டதால், போட்டி மழையின் காரணமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இப்போட்டியில் கோஹ்லி, நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது. அதில், போட்டியின் 18 ஓவரின் 2-வது பந்தின் போதே மழை குறுகிட்ட நிலையில், போட்டி நடுவர் போட்டியை நிறுத்தமால் தொடர்ந்து விளையாட அறிவுறுத்தியதால் கடுப்பான இந்திய தலைவர் விராட் கோஹ்லி நடுவரிடம் ஆக்ரோஷமாக பேசினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்