அதிரடி சதம் விளாசிய டூ பிளிசிஸ் மற்றும் மில்லர்! அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

அவுஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா பந்து வீச்சை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆகினர். பின்னர் வந்த மார்க்ரம் 32 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

எனினும் அதன் பின்னர் கைகோர்த்த டூ பிளிசிஸ் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் அதிரடியில் மிரட்டினர். சிக்சரும், பவுண்டரிகளுமாக விளாசிய இருவரும் அதிரடியாக சதம் விளாசினர்.

இவர்களின் அதிரடி ஆட்டத்தினால் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 320 ஓட்டங்கள் குவித்தது. டூ பிளிசிஸ் 114 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 15 பவுண்டரிகளுடன் 125 ஓட்டங்களும், டேவிட் மில்லர் 108 பந்துகளில் 4 சிக்சர் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 139 ஓட்டங்களும் எடுத்தனர்.

Getty

அவுஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், ஸ்டோனிஸ் தலா 2 விக்கெட்டுகளும், ஹேசல்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் ஷான் மார்ஷ் அபாரமாக விளையாடி 102 பந்துகளில் 4 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 106 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

AFP

அவரைத் தொடர்ந்து ஸ்டோனிஸ் 63 ஓட்டங்களும், கேரி 42 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் 27 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.

ஆனால், அதன் பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 280 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆல்-அவுட் ஆனது.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஸ்டெயின், ரபடா தலா 3 விக்கெட்டுகளும், பிரிடோரியஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்