இலங்கையின் இளம் சுழற்பந்து வீச்சாளர் பந்துவீச்சில் சந்தேகம்: பரிசோதனைக்கு உட்படுத்த ஐசிசி உத்தரவு

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜெய பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதால், பரிசோதனைக்கு உட்படுத்துமாறு ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜெய விளையாடி வருகிறார். இந்நிலையில் அவரது பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்னும் 14 நாட்களுக்குள், அகில தனஞ்ஜெய தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

எனினும், ஐ.சி.சியின் ஆய்வு முடிவு வெளிவரும் வரை சர்வதேச போட்டிகளில் அகில தனஞ்ஜெய விளையாட அனுமதிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில தனஞ்ஜெய 4 டெஸ்ட்களில் 19 விக்கெட்டுகளும், 30 ஒருநாள் போட்டிகளில் 46 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்