இன்னும் 69 ஓட்டங்கள் தான்: புதிய சாதனை படைக்க காத்திருக்கும் ரோஹித் ஷர்மா

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய டி20 கிரிக்கெட் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா இன்னும் 69 ஓட்டங்கள் எடுத்தால், டி20 வரலாற்றில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு விராட் கோஹ்லிக்கு பதிலாக ரோஹித் ஷர்மா அணித்தலைவராக செயல்பட உள்ளார்.

தற்போது டி20 போட்டிகளில் 2,203 ஓட்டங்கள் எடுத்து, அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் உள்ள நியூசிலாந்தின் மார்டின் கப்தில் 2,271 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

கப்திலை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிக்க, ரோஹித் ஷர்மாவுக்கு இன்னும் 69 ஓட்டங்கள் தான் தேவை. எனவே இன்றைய போட்டியில் அவர் 69 ஓட்டங்கள் குவித்தால் டி20 போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

இந்த ஆண்டில் மட்டும் ரோஹித் ஷர்மா 19 இன்னிங்சில் 1,030 ஓட்டங்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்