தினசரி 35 ரூபாய் சம்பளம்: கிரிக்கெட்டில் உச்ச நட்சத்திரத்தின் மறுபக்கம்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

2011 ஆம் ஆண்டு உலக கிண்ணம் வென்ற மகேந்திர சிங் டோனி தலைமையிலான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் முனாப் படேல் தமது பின்னணி குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள முனாப் படேல், நான் விளையாடிய வீரர்களில் டோனியைத் தவிர எஞ்சியோர் அனைவரும் ஓய்வு பெற்றுவிட்டார்கள்.

மற்றவர்கள் விளையாடி நான் மட்டும் ஓய்வு பெற்றால் மட்டுமே வருத்தமாக இருக்கும்.

எனவே, தற்போது வருத்தங்கள் எதுவும் இல்லை. நான் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறேன் என்பதையும் என்னால் நம்பமுடியவில்லை. எனக்கு கிரிக்கெட் தவிர எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார்.

நீண்ட 15 ஆண்டுகள் களத்தில் இருந்த முனாப் படேல், தாம் கிரிக்கெட் பக்கம் வரவில்லை எனில்,

தங்களது கிரமத்து இளைஞர்கள் போன்று ஆப்பிரிக்க நாட்டில் அன்றாட உணவுக்காக போராடும் நிலையில் இருந்திருப்பேன் என தெரிவித்துள்ளார்.

தரை ஓடுகள் கழுவும் நிறுவனம் ஒன்றில் தினசரி 35 ரூபாய் ஊதியத்தில் பணியாற்றிவந்த தமக்கு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்கும் என கனவிலும் கருதியதில்லை.

நரகத்துக்கு ஒப்பான வாழ்க்கை, இருப்பினும் தமது பெற்றோர்கள் அதை எதையும் தங்கள் பிள்ளைகளிடம் தெரிவித்ததில்லை என நினைவு கூர்ந்துள்ளார்.

கிரிக்கெட் வாழ்க்கையின் துவக்க காலகட்டத்தில் தம்மை அனைவரும் தவறாகவே புரிந்து கொண்டனர் எனவும், குஜராத் மாநிலத்தின் மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமத்தில் இருந்து வந்ததனால் கூட இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்