அறிமுக போட்டியிலேயே 3 விக்கெட்: உலகக் கிண்ண டி20யில் அசத்திய தமிழ்ப்பெண்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள தமிழ்ப்பெண்ணான ஹேமலதா தயாளன், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுக்களை எடுத்து அசத்தியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளில் தொடங்கியுள்ள மகளிர் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில், இந்திய அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்திய அணித்தரப்பில் ஹேமலதா, பூனம் யாதவ் ஆகிய வீராங்கனைகள் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இவர்களில் ஹேமலதா சென்னையைச் சேர்ந்த தமிழ்ப்பெண் ஆவார். மேலும் தனது அறிமுக டி20 போட்டியிலேயே அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன் பேட்டிங்கிலும் அதிரடியாக 7 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 15 ஓட்டங்கள் எடுத்து அசத்தியுள்ளார்.

தான் வீசிய 4 ஓவர்களில் 26 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஹேமலதா, சென்னையில் கல்லூரி படிப்பை முடித்தவர் ஆவார். இந்திய ஏ அணியில் இடம்பெற்ற ஹேமலதா, அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்தபோது 3 போட்டிகளில் 87 ஓட்டங்கள் குவித்திருந்தார்.

அதன் பின்னர், கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் 41 ஓட்டங்கள் மற்றும் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்