3.4 ஓவர்களில் 5 ரன் கொடுத்து 5 விக்கெட்கள்: பந்துவீச்சில் மிரட்டிய பிரபல வீராங்கனை

Report Print Raju Raju in கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் வங்கதேச அணியை 46 ரன்களில் சுருட்டி 60 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவு அணி அபார வெற்றி பெற்றது.

ஏ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து வங்கதேசம் அணி களமிறங்கியது.

டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் நைட் 32 ரன்களும், கேப்டன் டெய்லர் 29 ரன்களும் சேர்த்தனர். வங்கதேசம் தரப்பில் ஜஹானாரா ஆலம் 3 விக்கெட்டுகளையும், ருமானா அஹமது 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

107 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய வங்கேச அணி வெஸ்ட் இண்டீஸ் அணி வீராங்கனைகளின் வேகப்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 46 ரன்களில் சுருண்டது

இப்போட்டியில் வெஸ் இண்டீஸ் பந்துவீச்சாளர் டாட்டின் 3.4 ஓவர்கள் பந்துவீசி ஒரு மெய்டன் உள்பட 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார். ஆட்டநாயகி விருதையும் பெற்றார்.

உலகக் கோப்பை போட்டியில் மிகக்குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை எனும் சாதனையை படைத்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்