பேட்ஸ்மேனுக்கு அருகில் பீல்டரை நிற்கவைத்து பந்து வீசிய நியூசிலாந்து வீரர்! கதிகலங்க வைத்த மாலிக் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் மாலிக் அடித்த பந்து நொடிப் பொழுதில் அருகில் பீல்டிங் நின்று கொண்டிருந்த வீரர் மீது பட்டதால், அவர் வலியால் துடித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் டி20 தொடரை இழந்த நியூசிலாந்து அணி, அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதன் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இபோட்டியில் பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, 33-வது ஓவரை நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர் பெர்குசன் வீசினார்.

அப்போது அவர் பேட்ஸ்மேனுக்கு அருகில் பீல்டரை நிறுத்தினார். இப்படி பேட்ஸ்மேனுக்கு அருகில் பீல்டரை நிறுத்திவிட்டு, துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த மாலிக்கிற்கு ஷாட்பிட்ச் பந்து வீசியதால், அவர் அதை புல் ஷாட்டாக அடிக்க, பேட்டிலிருந்து அதிவேகமாக விரைந்த பக்கத்தில் நின்று கொண்டிருந்த நிகோல்ஸின் இடது கை தோள்பட்டையில் பலமாக அடித்து மேலே பறந்தது.

மேலே பறந்து வந்த பந்தை இஷ் சோதி கேட்ச் பிடித்து மாலிக்கை வெளியேற்றினார். எனினும் நிகோல்ஸுக்கு சரியான அடி விழுந்ததால் வலி தாங்க முடியாமல் விழுந்தார்.

அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்