கடைசி நாள் பீல்டிங்! சக வீரர்களிடம் பிரியாவிடை பெற்ற ரங்கன ஹேரத்! உருக்கமான வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹெராத், இன்று தனது கடைசி நாள் பீல்டிங்கை சக வீரர்களின் உற்சாகத்துடன் நிறைவு செய்தார்.

காலேவில் இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 342 ஓட்டங்களும், இலங்கை அணி 203 ஓட்டங்களும் எடுத்தன.

அதன் பின்னர் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 322 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதனைத் தொடர்ந்து, இலங்கை அணி களமிறங்கியது.

முன்னதாக, இந்தப் போட்டி தான் இலங்கை அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹெராத்திற்கு(40) கடைசி டெஸ்ட் போட்டியாகும். இதனால் இன்றைய 3ஆம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்ததால், ஹெராத்திற்கு பீல்டிங் செய்த கடைசி நாளாக இன்று அமைந்துவிட்டது.

பீல்டிங் முடிந்து இலங்கை வீரர்கள் பெவலியன் திரும்பியபோது சக வீரர்கள் ரங்கன ஹெராத்திற்கு பிரியாவிடை கொடுத்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

ரங்கன ஹெராத் 93 டெஸ்ட் போட்டிகளில் 433 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது சிறந்த பந்துவீச்சு 127 ஓட்டங்கள் கொடுத்து 9 விக்கெட்டுகள் வீழ்த்தியதாகும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்