ரோகித் சரவெடி சதம்: இந்திய பந்துவீச்சில் நொறுங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

வெஸ்டிண்டிஸ் அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவா் போட்டி லக்னௌவில் உள்ள அட்டல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

24 ஆண்டுகளுக்கு பின்னா் இந்த மைதானத்தில் நடைபெறும் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.

தொடக்க ஆட்டக்காரா்களாக களம் இறங்கிய ரோகித் ஷா்மாவும், ஷிகா் தவானும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினா்.

தவான் 41 பந்துகளில் 43 ஓட்டங்கள் சோ்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணித்தலைவர் ரோகித் ஷா்மா 61 பந்துகளில் 111 ஓட்டங்கள் குவித்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இது ரோகித் ஷா்மாவின் 4வது டி20 சதம். மேலும் இப்போட்டியில் 17 ஓட்டங்கள் சோ்த்திருந்த போது டி20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சோ்த்த இந்திய வீரா் என்ற பெருமையையும் ரோகித் பெற்றார்.

மேலும் லோகேஷ் ராகுல் 14 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்தார். ஒட்டு மொத்தமாக 20 ஓவா் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்கள் சோ்த்துள்ளது.

மேற்கு இந்திய தீவுகள் அணி 196 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

196 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டிஸ் அணியின் சார்பில் ஹோப், ஹட்மயர் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் வெஸ்ட் இண்டிஸ் அணியின் விக்கெட்டுகள் விழுந்தன.

அந்த அணியில் அதிகபட்சமாக பிராவோ 23 ஓட்டங்கள் எடுத்தார்.

இறுதியில் அணித்தலைவர் பிரித்வொய்ட் 15(19) ஓட்டங்களும், தாமஸ் 8(4) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், கலில் அஹமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

இதன்மூலம் வெஸ்டிண்டிஸ் அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்