தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை விட இவர் தான் சிறந்த விக்கெட் கீப்பர்: முன்னாள் வீரர் அசாருதீன்

Report Print Kabilan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், ரிஷப் பண்டிற்கு விக்கெட் கீப்பிங் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என முன்னாள் வீரர் அசாருதீன் தெரிவித்துள்ளார்.

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதிய முதலாவது டி20 போட்டியில், தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் இந்திய அணியில் இடம்பிடித்திருந்தனர்.

இருவருமே விக்கெட் கீப்பர்கள் என்பதால் யார் அந்த பணியை செய்யப் போகிறார் என்ற கேள்வியெழுந்த நிலையில், தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.

இந்நிலையில், ரிஷப் பண்டிற்கு ஆதரவாக முன்னாள் வீரர் அசாருதீன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

‘பண்ட்டை நாம் ஆதரிக்க வேண்டும். இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யலாம் என்றால் ஏன் டி20 போட்டிகளில் செய்யக் கூடாது? நிச்சயம் அவர் இங்கிலாந்தில் கார்த்திக்கை விட அதிக திறன்களை வெளிப்படுத்தினார். இனி வரும் போட்டிகளிலாவது ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

இந்திய டி20 அணியில் அனுபவ வீரர் டோனியை நீக்கியுள்ள நிலையில், அவரது இடத்தை நிரப்ப தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இருவருக்கும் இடையே போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.

AP
Getty Images

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்