பாகிஸ்தான் வீரரை மிரள வைத்த வில்லியம்சன்: அபாரமாக ஒற்றை கையில் தாவி கேட்ச் பிடித்த வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து வீரர் கானே வில்லியம்சன் ஒற்றை கையில் தாவி அபாரமாக கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார்.

பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி கோலின் முன்ரோ(44) மற்றும் கேரி ஆண்டர்சன்(44) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 153 ஓட்டங்கள் எடுத்தது.

அதன் பின் 154 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில் பாபர் அஜாம் 40 ஓட்டங்கள் குவித்தார்.

இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது 5-வது ஓவரில் அந்த அணியின் தொடக்க வீரர் பகார் ஜமானின் கேட்ச்சை நியூசிலாந்து அணியின் தலைவர் வில்லியம்சன் அபாரமாக தாவி கேட்ச் பிடித்தார்.

மிட் ஆப் திசையில் பீல்டிங் செய்த வில்லியம்சன், அவரிடமிருந்து விலகிச்சென்ற பந்தை அருமையாக கேட்ச் பிடித்தார், அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்